மொபட் டிக்கியில் வைத்த ரூ.2.90 லட்சம் திருட்டு
மொபட் 'டிக்கி'யில் வைத்தரூ.2.90 லட்சம் திருட்டுசேலம், செப். 14-சேலம், ஸ்வர்ணபுரியை சேர்ந்தவர் சத்யா, 34. ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவரது அலுவலகம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ளது. அங்கு கடந்த, 4 இரவு, 'ஆக்டிவா' மொபட்டை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். சற்று நேரத்தில் திரும்பி வந்தபோது, வாகன 'டிக்கி'யில் வைத்திருந்த, 2.90 லட்சம் ரூபாயை காணாமல் திடுக்கிட்டார். இதுகுறித்து நேற்று முன்தினம் அவர் அளித்த புகார்படி, செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.