உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பேக்கரி உள்பட 3 கடைகளில் திருட்டு

பேக்கரி உள்பட 3 கடைகளில் திருட்டு

ஓமலுார், ஓமலுார் அருகே கோட்டமேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ், 29. புளியம்பட்டியில் பேக்கரி நடத்துகிறார். அதன் மேற்கூரையை உடைத்து நேற்று முன்தினம் இரவு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், 15,000 ரூபாயை திருடிச்சென்றனர்.இக்காட்சி அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து நேற்று சுரேஷ் புகார்படி, ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர். அதேபோல் அருகே உள்ள மீன் கடையில், 800 ரூபாய், மளிகை கடையில் சில்லரை காசுகள் திருட்டுபோனது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்