உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நோட்டமிட்டு வீட்டை திறந்து 6 பவுன் திருட்டு

நோட்டமிட்டு வீட்டை திறந்து 6 பவுன் திருட்டு

சேலம்: சேலம், பள்ளப்பட்டி, சின்னேரிவயல்காட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி மல்லிகா, 55. இவர் சேலத்தில் உள்ள அழகு நிலையத்தில் பணிபுரிகிறார்.வழக்கமாக வேலைக்கு செல்லும்போது வீட்டை பூட்டிவிட்டு சாவியை மின் பெட்டிக்குள் வைத்து செல்வார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நேற்று முன்தினம் மல்லிகா வேலைக்கு சென்ற பின், சாவியை எடுத்து திறந்து வீட்டில் நுழைந்து, பீரோவில் இருந்த, 6 பவுன், 50,000 ரூபாயை திருடி சென்றனர். இதுகுறித்து மல்லிகா புகார்படி, பள்ளப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ