ரூ.10 லட்சம் மதிப்புள்ள மின் பொருட்கள் திருட்டு
ரூ.10 லட்சம் மதிப்புள்ளமின் பொருட்கள் திருட்டுசேலம், செப். 17-தனியார் நிறுவனத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளது.சென்னை, புரசைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன், 36. இவர், சேலம் அம்மாபேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கண்காணிப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கடந்த, 2022 நவ., 24ல் நிறுவனத்தில் வைத்திருந்த மொபைல்போன் டவர், டீசல் ஜெனரேட்டர், இரண்டு பேட்டரி மற்றும் மின்னணு உபகரணங்கள் என, 10 லட்சத்து, 71 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.இது குறித்து நேற்று முன்தினம், தமிழரசன் அளித்த புகார்படி, அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.