உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் பெண்ணிடம் 10 பவுன் நகை பறித்த கேரள தம்பதியர் உள்பட மூன்று பேர் கைது

சேலம் பெண்ணிடம் 10 பவுன் நகை பறித்த கேரள தம்பதியர் உள்பட மூன்று பேர் கைது

வீரபாண்டி: கோவில் திருவிழாக்களில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்கள், குழந்தைகளிடம் நகைகளை திருடும் கேரளா கும்-பலை சேர்ந்த தம்பதியர் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.சேலம், ஆட்டையாம்பட்டி வீரப்பன் வீதியை சேர்ந்த ரத்தி-னவேல் மனைவி குணரத்தினம், 67. இவர் கடந்த ஆக.,14ல், ஆட்டையாம்பட்டி எட்டுப்பட்டி பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா குண்டம் இறங்கும் நிகழ்ச்சியை காண காலை, 6:30 மணிக்கு வந்துள்ளார். கோவில் முன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தில் இருந்த போது, அவரது கழுத்தில் இருந்த, 10 பவுன் தாலி சங்கிலியை மர்ம நபர்கள் திருடினர்.இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நி-லையில், நகை திருட்டு கும்பல் கேரளாவில் உள்ளதாக, தனிப்-படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார், நேற்று முன்தினம் கேரளா சென்று பாலக்காட்டை சேர்ந்த திலீப்குமார், 35, அவரது மனைவி பூமாரி, 37 மற்றும் பூமாரியின் தோழி ரோஷினி, 35, ஆகிய மூவரை கைது செய்து, ஆட்டையாம்பட்டிக்கு அழைத்து வந்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், குணரத்தினத்தின் தாலி சங்கிலியை பறித்ததை ஒப்புக்கொண்டனர். தங்க சங்கிலியை விற்று, அந்த பணத்தில் வாங்கிய காரை, போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும், கேரளாவை சேர்ந்த-வர்கள். இவர்கள் கோவை, பொள்ளாச்சி, திருநெல்வேலி ஆகிய ஊர்களில் வசித்து வந்தனர். கோவில் திருவிழாக்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்கள், குழந்தைகளின் நகைகளை திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட கணவன், மனைவி உள்பட மூவரையும், போலீசார் நேற்று சேலம் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை