விபத்தில் சிக்கிய காரில் 390 கிலோ புகையிலை
சேலம்:விபத்தில் சிக்கிய காரில், 390 கிலோ புகையிலை பறிமுதல் செய்யப்பட்டு உத்தர பிரதேச வாலிபரை போலீசார் தேடுகின்றனர்.சேலம், வீராணம் அருகே குப்பனுார் சாலையோர பள்ளத்தில் நேற்று அதிகாலை, ஸ்கார்பியோ ஜீப் கவிழ்ந்து கிடந்தது. இதுகுறித்து மக்கள் தகவல்படி, அங்கு சென்ற வீராணம் போலீசார், ஜீப்பை சோதனை செய்ததில், மூட்டை, மூட்டையாக புகையிலை பாக்கெட்டுகள் இருந்தன. ஜீப்பை மீட்டு, ஸ்டேஷனுக்கு கொண்டு சென்ற போலீசார், மூட்டைகளை ஆய்வு செய்ததில், 390 கிலோ புகையிலை இருந்தது தெரியவந்தது. அதை ஓட்டிவந்தவர் உத்தர பிரதேசத்தை சேர்ந்த கணேஷ் ராம் உத்தர பிரதேச பதிவெண் கொண்ட ஜீப் என்பதும், பெங்களூருவில் இருந்து புகையிலை கடத்திக்கொண்டு, மர்ம நபர்கள் ஓட்டிவந்தபோது விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகித்து, அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.