உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 1 லட்சம் பேர் உறுதிமொழி தி.மு.க., - மா.செ., அறிவுரை

1 லட்சம் பேர் உறுதிமொழி தி.மு.க., - மா.செ., அறிவுரை

இடைப்பாடி, தி.மு.க.,வின் சேலம் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம், இடைப்பாடியில் நேற்று நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து தலைமை வகித்தார். அதில், மாவட்ட செயலர் செல்வகணபதி பேசுகையில், ''முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளான, வரும், 15ல், மாவட்டத்தில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் பேர் கூடி, உறுதிமொழி ஏற்க வேண்டும். அதேபோல் கரூரில் நடக்கும் முப்பெரும் விழாவில் கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்க வேண்டும்,'' என்றார்.மாவட்ட துணை செயலர்கள் சம்பத்குமார், சுந்தரம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், பூவாகவுண்டர், நகர செயலர்கள் பாஷா, செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ