மேலும் செய்திகள்
மகளிர் உரிமைத்தொகைக்கு 95,923 பேர் விண்ணப்பம்'
07-Sep-2025
சேலம் : சேலம் மாநகராட்சி, 18வது வார்டு மக்களுக்கு, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம், தியாகராஜர் பாலிடெக்னிக்கில் நேற்று நடந்தது. அங்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு செய்த பின் கூறியதாவது:சேலம் மாவட்டத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம், கடந்த ஜூலை, 15ல் தொடங்கி, நவம்பர் வரை, 432 குறைதீர் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. செப்., 24 வரை நடந்த முகாம்களில், மக்கள், 1,06,526 மனுக்களை கொடுத்துள்ளனர். தவிர, 1,17,240 பெண்கள், மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பங்கள் வழங்கியுள்ளனர். இதன்மூலம், 2,23,766 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றின் மீது, 45 நாட்களில் தீர்வு காண, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து, 4 பேருக்கு சொத்து வரி பெயர் மாற்ற உத்தரவு, ஒருவருக்கு காலி நில வரி உத்தரவை, அமைச்சர் வழங்கினார். கலெக்டர் பிருந்தாதேவி, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
07-Sep-2025