10ம் வகுப்பு பொதுத்தேர்வு2,000 ஆசிரியருக்கு பணி ஒதுக்கீடு
10ம் வகுப்பு பொதுத்தேர்வு2,000 ஆசிரியருக்கு பணி ஒதுக்கீடுசேலம்:தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, வரும், 28ல் தொடங்க உள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில், அரசு, அதன் உதவி பெறும், சுயநிதி பள்ளிகள், 522ல், 41,456 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதற்கு அறை கண்காணிப்பாளர், மைய பொறுப்பாளர், பறக்கும் படை உறுப்பினர் உள்ளிட்ட பணிக்கு, ஆசிரியர்களை நியமிக்கும் முகாம்கள், சேலம் மாவட்டத்தில் நேற்று நடந்தன.ஆத்துார், கெங்கவல்லி, தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீடு கூட்டம், ஆத்துாரில் நடந்தது. சங்ககிரி, இடைப்பாடி, கொளத்துார், நங்கவள்ளி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, தாரமங்கலம், வீரபாண்டி, மேச்சேரி, காடையாம்பட்டி ஒன்றிய ஆசிரியர்களுக்கு கருப்பூரில் நடந்தது. வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், ஏற்காடு, சேலம் ஊரகம், சேலம் நகர்புறம், பனமரத்துப்பட்டி, ஓமலுார் ஒன்றிய ஆசிரியர்களுக்கு, சேலம், மரவனேரியில் நடந்தது.முதன்மை கல்வி அலுவலர் கபீர், மாவட்ட கல்வி அலுவலர்கள், குலுக்கல் முறையில் இடம் தேர்வு செய்து, ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்தனர்.இதில், 2,000க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.