உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மொபட்டில் சென்றபோது 10 பவுன் மாயம்

மொபட்டில் சென்றபோது 10 பவுன் மாயம்

சேலம்: சேலம், தாதகாப்பட்டி, சண்முகா நகரை சேர்ந்த பத்மா மகள் பவித்ரா, 18. நேற்று மதியம் பத்மா, பவித்ரா ஆகியோர், 'ஜூபிடர்' மொபட்டில் உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்-தனர். பவித்ரா ஓட்டினார். 10 பவுன் நகையை, மொபட்டின் முன் பகுதியில் வைத்து சென்று கொண்டிருந்தனர். பத்மா நகை எங்கே என கேட்டபோது, பவித்ரா மொபட்டை நிறுத்தி பார்த்தார். ஆனால் நகை வைத்திருந்த பர்ஸ் இல்லை. அதிர்ச்சி அடைந்த இருவரும், நகை தவறி விழுந்திருக்கலாம் என வந்த பாதையில் தேடினர். கிடைக்காததால், பத்மா அளித்த புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ