மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் ஆண்டு விழா
02-Feb-2025
ஏற்காடு : ஏற்காடு, மாண்ட்போர்ட் பள்ளியில், 108-வது ஆண்டு பரிசளிப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது.சிறப்பாளராக பள்ளியின் முன்னாள் மாணவரும், தொழிலதிபரு-மான பால் ஜே ஆலுக்காஸ் கலந்து கொண்டார். பள்ளி முதல்வர் டோமினிக் சாவியோ வரவேற்று, பொன்னாடை அணிவித்து கவுர-வித்தார். ஆரோக்கியசாமி பூங்கொத்து வழங்கினார். டேவிட் ராஜா நினைவு பரிசு வழங்கினார்.கல்வியில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவியர், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் மாநில, தேசிய அளவில் வெற்றி பெற்றவர்கள், 100 சதவீத வருகை பதிவு பெற்றவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கடந்தாண்டு பொதுத்தேர்வில், பல்வேறு பாட பிரிவுகளில் மாணவ, மாணவியர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற கார-ணமாக இருந்த ஆசிரியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்-றிதழ், விருதுகள் வழங்கப்பட்டன. இளநிலை மாணவ மாணவிய-ருக்கு டேவிட் அடைக்கலம், மொலின், பால்ராஜ் ஆகியோர் பரிசு வழங்கினர். மேல்நிலை மாணவர்களுக்கு சிறப்பு விருந்-தினர் பால் ஜே ஆலுக்காஸ் மற்றும் ரோஸ் பால் ஆகியோர் பரிசு வழங்கினர்.விழாவில் நாடகம், பசுமையை வலியுறுத்தும் அபிநய நாடகம், பரதம், மேற்கத்திய நடன நிகழ்ச்சிகள் அரங்கேறின. விழாவில் பினு மேத்யு, லுார்துசாமி, பிரான்சிஸ், அருள் ஆகாஷ் மற்றும் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஏற்-பாடுகளை பள்ளி முதல்வர் டோமினிக் சாவியோ தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
02-Feb-2025