மேலும் செய்திகள்
ஸ்டாலின் - பழனிசாமி வருகை ஓங்கப்போவது யார் 'கை?'
05-Aug-2025
ஆத்துார், ஆத்துார், சந்தனகிரியை சேர்ந்தவர் முருகேசன், 45. கூலித்தொழிலாளி. இவரது வீட்டில் கூண்டு அமைத்து கோழிகள் வளர்க்கிறார். சில நாட்களாக கோழி திருடுபோனதால், 'சிசிடிவி' கேமரா பொருத்தினார். அப்போதும் கோழி திருடுபோனதால், 'சிசிடிவி'யில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒருவர் கோழியை திருடுவது பதிவாகியிருந்தது.இதனால் முருகேசன், 12 கோழிகள் திருடுபோனதாகவும், வீடியோவில் பதிவானவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஆத்துார் டவுன் போலீசில் நேற்று புகார் அளித்தார். தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர். இதனிடையே அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
05-Aug-2025