மேலும் செய்திகள்
பிளாஸ்டிக் கவரில் இருந்த உணவு பொருட்கள் அழிப்பு
23-Jan-2025
சேலம்: சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் பாதுகாப்பு அலுவலர்கள், இறைச்சி கடைகளில் நேற்று சோதனை நடத்தினர். அதன்படி சேலம் மாநகரில் உள்ள, 4 மண்டலம், பனமரத்துப்பட்டி, இடைப்பாடி, மேட்டூர், கொளத்துார், ஓமலுார், காடையாம்பட்டி, வாழப்பாடி, நங்க-வள்ளி, பெத்தநாயக்கன்பாளையம் என, 65 கடைகளில் சோதனை நடந்தது. 18 கடைகளில் பழைய, கெட்டுப்போன சிக்கன், மட்டன் மீன் என, 123 கிலோ இறைச்சி பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. அத்துடன், 53 உணவு மாதிரிகள் எடுக்-கப்பட்டு, பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் கெட்-டுப்போன இறைச்சி விற்ற, 3 கடைகளுக்கு, 3,000 ரூபாய் அப-ராதம் விதிக்கப்பட்டது. விதிகளை பின்பற்றாத, 6 கடைகளுக்கு விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது.
23-Jan-2025