மண்டல அளவில் நடத்திய முகாமில் 124 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை
மண்டல அளவில் நடத்திய முகாமில்124 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைசேலம், நவ. 10-சேலம் தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கு மண்டல அளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கிவைத்து பேசியதாவது:முதல்வர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை நேரடி கட்டுப்பாட்டில் வைத்து, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.சேலம் மாவட்டத்தில் மட்டும் கடந்த, 3 ஆண்டுகளில், 37,192 மாற்றுத்திறனாளிகளுக்கு, 82.42 கோடி ரூபாய் பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. சுய வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தில் வங்கி கடன் மானியமாக, 25,000 ரூபாய் வழங்கும் திட்டம், மாணவ, மாணவியருக்கு, 14,000 ரூபாய் வரை கல்வி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு என, கல்வி, வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் பங்கு உறுதி செய்யப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.இதில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த, 731 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.அதில், 54 தனியார் நிறுவனத்தினர், 124 பேரை தேர்வு செய்தனர். விழாவில் கலெக்டர் பிருந்தாதேவி, மேயர் ராமச்சந்திரன், எம்.பி., செல்வகணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.