ரத்த கொடையாளர் தினம் முகாமில் 126 பேர் தானம்
சேலம், உலக ரத்த தான கொடையாளர் தினத்தையொட்டி, சேலம் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில், ரத்த தான முகாம் நேற்று நடந்தது. ரத்த வங்கி அலுவலர் ரவீந்திரன், தொடங்கி வைத்தார். 20 பேர் ரத்த தானம் செய்தனர். தவிர ரத்த வங்கி சார்பில் சேலத்தில் உள்ள ஒரு ஓட்டலில், முகாம் நடந்தது. அதில், ஓட்டல் ஊழியர்கள், 56 பேர் ரத்தம் வழங்கினர். அதேபோல் வைகுந்தம் சுங்கச்சாவடியில் நடந்த முகாமில், 50 பேர் ரத்த தானம் செய்தனர். அவர்கள் மூலம், 126 யுனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளதாக, ரவீந்திரன் தெரிவித்தார். ரத்ததானம் செய்தோருக்கு, பழச்சாறு, பிஸ்கட் வழங்கப்பட்டன.