10ல் தேசிய குடற்புழு நீக்க முகாம் 13 லட்சம் பேர் பயன்பெற வாய்ப்பு
சேலம்: சேலம் மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம் வரும், 10ல் நடக்க உள்ளது. அதில் ஒன்று முதல், 19 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகள், 20 - 30 வயது பெண்களுக்கு, இலவசமாக அல்பெண்டசோல் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும். கருவுற்ற, பாலுாட்டும் பெண்களுக்கு கிடையாது.அங்கன்வாடி மையங்கள் - 2,696; அரசு, அதன் உதவி பெறு-பவை, தனியார் பள்ளிகள் - 2,339; உயர்கல்வி நிறுவனங்கள் - 114, குழந்தை பராமரிப்பு நிறுவனங்கள் - 35ல் முகாம் நடக்கும். இதன்மூலம், 1 - 19 வயதுடைய, 11.17 லட்சம் பேர், 20 - 30 வய-துடைய பெண்கள், 2.24 லட்சம் பேர் என, 13.42 லட்சம் பேர் பய-னடைவர். குடற்புழு நீக்க ரத்த சோகையை தடுத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. பொது சுகாதாரம், பள்ளி கல்வி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் உள்பட அனைத்து துறை களப்பணியாளர்கள், இப்பணியில் ஈடுபடுவர். அதில் விடுபட்ட குழந்தைகளுக்கு சிறப்பு முகாம், 17ல் நடக்க உள்ளது என, கலெக்டர் பிருந்தா-தேவி தெரிவித்துள்ளார்.