உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 1,350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் காரில் கடத்திய 2 பேருக்கு காப்பு

1,350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் காரில் கடத்திய 2 பேருக்கு காப்பு

சேலம், சேலம், கொண்டலாம்பட்டி அருகே புத்துாரில் உள்ள மாவு மில் அருகே, உணவு பாதுகாப்பு பிரிவு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது காரில் இருந்து சிலர் மூட்டைகளை இறக்கி வைத்துக்கொண்டிருந்தனர். மூட்டைகளை, போலீசார் பிரித்து பார்த்தபோது, ரேஷன் அரிசி என தெரிந்தது. தொடர்ந்து மில்லில் சோதனை செய்தபோது, ரேஷன் அரிசி மூட்டைகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் இருந்தவர்களிடம் விசாரித்ததில், மக்களிடம் குறைந்த விலைக்கு அரிசியை வாங்கி, பாலிஷ் போட்டு, கோழிப்பண்ணை, வடமாநிலங்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பது தெரிந்தது. கடத்தலில் ஈடுபட்டது, பழைய சூரமங்கலத்தை சேர்ந்த லட்சுமணன், 30, புரோக்கராக சாமியப்பன், 30, என்பவர் செயல்பட்டது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், 1,350 கிலோ அரிசி, சுமோ காரை பறிமுதல் செய்தனர். ஆலை உரிமையாளரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ