மேலும் செய்திகள்
முடிச்சுட்டீங்க போங்க அட இருங்க boy Moment
22-Nov-2024
மேட்டூர்: மேட்டூர் அணை, 16 கண் மதகில் தேங்கிய பாசியை அகற்ற, நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நேற்று முன்தினம், 109.87 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, 110 அடியாக உயர்ந்தது. இதனால் உபரிநீர் திறக்கும், 16 கண் மதகு ஷட்டர்களில், 10 அடி உயரம் வரை தண்ணீர் தேங்கியுள்ளது. ஆனால் சில நாட்களாக நீர்பரப்பு பகுதியில் வீசிய காற்றால் அடித்து வரப்பட்ட தாவர கழிவு அழுகி, 16 கண் மதகு பகுதியில் நீல நிறத்தில் கெட்டியான பாசிகளாக மாறி தேங்கி நிற்கிறது. அதை அகற்ற, நீர்வளத்துறை பொறியாளர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.இதுகுறித்து பொறியாளர்கள் கூறியதாவது: நீர்திறப்பு அதிகரித்தால் சுரங்க மின் நிலையங்கள் வழியே தண்ணீர் வெளியேற்றப்படும். அப்போது பாசிகள் தேங்காது. இருப்பினும் பாசிகளை அகற்ற நாட்டு சர்க்கரையை, 7 நாட்கள் நொதிக்க செய்து நுண்ணுயிர் கலவை தயார் செய்கிறோம். அந்த கலவையை, தேங்கி நிற்கும் கழிவுநீரில் தெளிக்கும்போது, நல்ல பாக்டீரியாக்கள் வேதி வினை புரிந்து, நாற்றம் வீசும் பாக்டீரியாக்கள் அழிந்துவிடும். விரைவில் நுண்ணுயிர் கலவை, பாசிகளில் தெளிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
22-Nov-2024