உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 17 ஊராட்சி செயலர் இடமாற்றம்; உத்தரவை ரத்து செய்தார் பி.டி.ஓ.,

17 ஊராட்சி செயலர் இடமாற்றம்; உத்தரவை ரத்து செய்தார் பி.டி.ஓ.,

ஆத்துார் : சேலம் மாவட்டம் ஆத்துார் ஒன்றியத்தில் உள்ள, 20 ஊராட்சிகளில், 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் செயலரை இடமாற்றி, கடந்த, 14ல், ஆத்துார் பி.டி.ஓ., வெங்கட்ரமணன் உத்தரவிட்டார். ஊராட்சி தலைவர்கள், பி.டி.ஓ., உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும் பலனில்லை.தொடர்ந்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர், பி.டி.ஓ.,விடம் மனு அளித்தனர். இந்நிலையில் ஊராட்சி செயலர் இடமாற்ற உத்தரவை ரத்து செய்து, பி.டி.ஓ., உத்தரவிட்டுள்ளார். அதில், 'கலைஞரின் கனவு இல்லம் வீடு சரிபார்ப்பு பட்டியல் தயாரிக்க வேண்டியுள்ளது. அதற்கு வரும், 25க்குள் பயனாளிகளை தேர்வு செய்து, கிராம சபையில் வைத்து ஜூலை, 10ல், பயனாளிகளுக்கு பணி உத்தரவு வழங்கி, அதே மாதம், 15ல் பணி தொடங்க வேண்டியுள்ளது. அரசு திட்டப்பணியில் சுணக்கம் ஏற்படக்கூடாது என்ற நோக்கில், நிர்வாக நலன் கருதி இடமாறுதல் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது' என கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ