உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விஜயராகவாச்சாரியார் 172வது பிறந்த நாள் விழா

விஜயராகவாச்சாரியார் 172வது பிறந்த நாள் விழா

சேலம் : தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் அஸ்தம்பட்டி கிளை சார்பில், டாக்டர் விஜயராகவாச்சாரியார் 172வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.சேலம் சகாதேவபுரத்தில் உள்ள அவரது நினைவு நுாலகத்தில், நிறுவப்பட்டுள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, 2வது அக்ரஹாரம், லட்சுமி நாராயண பெருமாள் கோவில் பின்புறமுள்ள காமராஜர் சிலை, எதிரே விஜயராகவாச்சாரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினர். சங்க மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். கிளை செயலர் நடராஜன் வரவேற்றார்.கிளை தலைவர் காசிநாதன், ஆடிட்டர் ராமன், வழக்கறிஞர் சிவக்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை