உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 190 நாய்களுக்கு தடுப்பூசி

190 நாய்களுக்கு தடுப்பூசி

தலைவாசல், தலைவாசல், ஆறகளூரில் நேற்று முன்தினம், செல்லமுத்து, 50, என்பவரது, 10 ஆடுகள், தெரு நாய்கள் கடித்து குதறியதில் இறந்தன. ஒரு வாரத்தில், 20 ஆடுகள், 10 கன்றுக்குட்டிகள் இறந்துள்ளன. இதனால் வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம், ஆறகளூரில், 6 இடங்களில் நேற்று நடந்தது. கால்நடை மருத்துவ குழுவினர், பஸ் ஸ்டாப், தெரு, சாலை, பள்ளி, கோவில் உள்ளிட்ட இடங்களில் சுற்றித்திரிந்த, 134 தெரு நாய்களுக்கு, தடுப்பூசி போட்டனர். தொடர்ந்து, வளர்ப்பு நாய், பூனைகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.அதேபோல் ஆத்துார் கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் நவநீதன் தலைமையில் மருத்துவ குழுவினர், கெங்கவல்லி அருகே கடம்பூரில் நேற்று, 56 நாய்களுக்கு தடுப்பூசி போட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ