மேலும் செய்திகள்
அலுவலர்கள் 'ஆப்சென்ட்' பொதுமக்கள் 'அப்செட்'
19-Nov-2024
சேலம், நவ. 21-------சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமை வகித்து பேசியதாவது: சேலம் மாவட்டத்தில், 26 மக்கள் சந்திப்பு திட்ட முகாம்கள், கடந்த மாதம், 23 முதல், நவ., 11 வரை நடத்தப்பட்டது. இதில் மக்களிடம் இருந்து, 19,037 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மனுக்கள் மீது அரசு அலுவலர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதேபோன்று மக்கள் அளிக்கும் மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.கலெக்டர் பிருந்தாதேவி, மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத்சிங், டி.ஆர்.ஓ., மேனகா உள்பட பலர் பங்கேற்றனர்.
19-Nov-2024