உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 2 பவுன் திருட்டு

2 பவுன் திருட்டு

ஓமலுார், காடையாம்பட்டி, பூசாரிப்பட்டி, மாதன்காட்டை சேர்ந்தவர் அம்சவேணி, 60. இவரது கணவர் இறந்துவிட்டார். இரு மகள்களும் திருமணமாகி சென்றதால், அம்சவேணி தனியே வசிக்கிறார். அவர், மேட்டூரில் உள்ள மகள் வீட்டுக்கு கடந்த, 18ல் சென்றார். நேற்று முன்தினம் பூசாரிப்பட்டியில் உள்ள வீடு திறந்து கிடந்ததாக, பக்கத்து வீட்டில் வசிப்பவர், அம்சவேணி க்கு தகவல் கொடுத்தனர். அவர் வந்து பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த, 2 பவுன் சங்கிலி திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து அம்சவேணி புகார்படி, தீவட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.---------------------------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை