புகையிலை பறிமுதல் 2 பேர் கைது
சேலம், சேலம், புது பஸ் ஸ்டாண்டில், மதுரை பஸ்கள் நிற்கும் இடத்தில் நேற்று பள்ளப்பட்டி போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சாக்கு பையுடன் நின்றிருந்தவரை பிடித்து விசாரித்ததில், தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த நயினார் முகமது, 30, என்பதும், சாக்கு பையில், 79 கிலோ புகையிலை பொருட்கள் இருந்ததும் தெரிந்தது. மேலும் பெங்களூரில் இருந்து தேனி மாவட்டத்துக்கு கடத்த முயன்றதும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அதேபோல் அழகாபுரம் போலீசார், நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, ரோகிணி கார்டனை சேர்ந்த தினேஷ்குமார், 46, என்பவரிடம், 6 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. இதனால் அவரை, போலீசார் கைது செய்தனர்.