உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.27 லட்சத்துக்கு சிகரெட் திருட்டு பெங்களூருவில் 2 பேர் வளைப்பு

ரூ.27 லட்சத்துக்கு சிகரெட் திருட்டு பெங்களூருவில் 2 பேர் வளைப்பு

சேலம், சேலம், அரிசிபாளையம், தம்மண்ணன் சாலையில், சிவபாலன் என்பவர் சிகரெட், சாக்லெட் உள்ளிட்ட பொருட்களை, குடோனில் வைத்து சில்லரை கடைகளுக்கு விற்று வருகிறார். கடந்த ஜூன், 6ல் குடோனில் இருந்து, 27.69 லட்சம் ரூபாய் மதிப்பில் சிகரெட் பண்டல்களை, மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரித்து, கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், 2 பேர் திருடியது தெரிந்தது. தனிப்படை அமைத்து போலீசார் இருவரையும் தேடினர்.அவர்கள், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருப்பது தெரிந்தது. அங்கு சென்ற போலீசார், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ்குமார், 30, பிரகாஷ் பரிஹார், 40, ஆகியோரை கைது செய்து, 18 பண்டல் சிகரெட்டுகளை மீட்டனர். மேலும் ஒருவரை தேடுவதாக, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ