உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தொழிலாளியை தாக்கிய 2 சிறுவர்கள் மீட்பு

தொழிலாளியை தாக்கிய 2 சிறுவர்கள் மீட்பு

ஆத்துார்: ஆத்துாரில், கட்டட தொழிலாளியை தாக்கிய இரு சிறுவர்களை, போலீசார் மீட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.ஆத்துார் அருகே நரசிங்கபுரம், பழைய வீட்டுவசதி வாரியத்தை சேர்ந்தவர் குமார், 40. இவர், கோவையில் கட்டுமான வேலை செய்து வருகிறார். கடந்த, 10ல், ஆத்துார் பஸ் ஸ்டாண்டிற்கு, அதிகாலை, 3:30 மணியளவில் வந்தபோது, மதுபோதையில் இருந்த இரு சிறுவர்கள் உள்பட நான்கு பேர் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து குமார் அளித்த புகாரில், நான்கு பேர் மீதும், ஆத்துார் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நேற்று காந்திபுரம், புதுப்பேட்டையை சேர்ந்த, 16, 17 வயதுள்ள சிறுவர்களை மீட்டனர். சேலம் இளம் சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தி, சேலம் அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி