உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தகர கூடம் அகற்ற 2 நாள் அவகாசம்

தகர கூடம் அகற்ற 2 நாள் அவகாசம்

மேட்டூர்: மேட்டூர், மாதையன்குட்டையில் இருந்து எலிகரடு செல்லும் சாலையோரம் மாரியம்மன் கோவில் உள்ளது. அதன் எதிரே சகோதரர்கள் சுப்ரமணியன், சுவாமிநாதன் வசிக்கின்றனர். அவர்கள் இடையே நில பங்கீடு செய்வதில் தகராறு ஏற்பட்டது. இதனால் சுப்ரமணியன் ஆக்ரமித்து அவர் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் தகர கூடத்தை அகற்ற, சுவாமிநாதன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆக்ரமிப்பை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் மேட்டூர் நகரமைப்பு அலுவலர் நிர்மலாதேவி, ஆய்வாளர் குமரேசன் உள்ளிட்ட அலுவலர்கள், ஊழியர்கள், நேற்று ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றனர். அதற்கு சுப்ரமணியன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.பின் நகராட்சி கமிஷனர் நித்யா பேச்சு நடத்தியபோது, இரு நாட்கள் அவகாசம் கேட்டனர். அதை எழுத்துப்பூர்வமாக வாங்கிய கமிஷனர், இரு நாட்களில் அகற்றாவிட்டால், நகராட்சி சார்பில் அகற்றப்படும் என கூறிச்சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ