உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாய்களை துன்புறுத்திய 2 ஊழியர்கள் சஸ்பெண்ட்

நாய்களை துன்புறுத்திய 2 ஊழியர்கள் சஸ்பெண்ட்

மேட்டூர்:தடுப்பூசி போட்ட நாய்களை சாலையோரம் இறக்கிவிட்ட இரு ஊழியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். சேலம் மாவட்டம், மேட்டூர், தொட்டில்பட்டியில் அனல்மின் நிலைய குடியிருப்பு உள்ளது. அங்கு அதிகளவில் சுற்றி வரும் தெரு நாய்கள், மின் அலுவலர்கள் பணிக்கு செல்ல இடையூறாக உள்ளன என, அனல்மின் நிலைய உதவி பொறியாளர், டவுன் பஞ்சாயத்துக்கு கடிதம் அனுப்பினார். தொடர்ந்து, இரு நாட்களுக்கு முன், டவுன் பஞ்சாயத்து டிராக்டர் டிரைவர் செல்லத்துரை, துாய்மை பணியாளர் மாது ஆகியோர், நாய்களுக்கு தடுப்பூசி போட்டு, அதே இடத்தில் விடாமல் டிராக்டரில் ஏற்றி சாலையோரம் இறக்கி விட்டுள்ளனர். இதனால், நாய்களை இருவரும் துன்புறுத்தியதாக புகார் வந்ததால், செயல் அலுவலர் திருநாவுக்கரசு, அந்த இருவரையும், 'சஸ்பெண்ட்' செய்து நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை