மேலும் செய்திகள்
86 கிலோ புகையிலை பறிமுதல்
14-Jan-2025
மேட்டூர்: கொளத்துார், வரப்பள்ளத்துார், மோரி தோட்டத்தை சேர்ந்த விவசாயி சண்முகசுந்தரம், 54. இவர், நேற்று முன்தினம் இரவு, பசு மாடுகளை தோட்டத்தில் கட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு பால் கறக்க சென்றபோது, தோட்டத்தில் இருந்த ஒரு பசுமாட்டை காணவில்லை. இதுகுறித்து சண்முகசுந்தரம் புகார்படி, கொளத்துார் போலீசார் விசாரணையில், பண்ணவாடியை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் சூர்யா, 24, குமார், 48, திருடியது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், மாட்டை மீட்டு, சண்முகசுந்தரத்திடம் ஒப்படைத்தனர்.
14-Jan-2025