உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 5 ஆண்டுக்கு பின் 2 பேர் சிக்கினர்

5 ஆண்டுக்கு பின் 2 பேர் சிக்கினர்

கெங்கவல்லி, கெங்கவல்லி, கூடமலையை சேர்ந்தவர் பொன்னுசாமி, 39. இவர் மீது, 2021 ஜூன், 20ல், கெங்கவல்லி போலீசார் விபத்து வழக்கு பதிவு செய்தனர். 5 ஆண்டாக, ஆத்துார் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தார். கடந்த, 29ல், வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொன்னுசாமிக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தது.அதேபோல் நடுவலுார் ஊராட்சி மோட்டூரை சேர்ந்த துரைசாமி, 49, மீது, 2021 டிச., 23ல், அடிதடி பிரச்னை தொடர்பாக, கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிந்தனர். இதில் துரைசாமி, 5 ஆண்டாக ஆஜராகாமல் இருந்தார். கடந்த, 29ல் வழக்கை விசாரித்த, ஆத்துார் நீதிமன்றம், துரைசாமிக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தது. நேற்று வீட்டில் இருந்த பொன்னுசாமி, துரைசாமியை கைது செய்த போலீசார், ஆத்துார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை