கஞ்சா வைத்திருந்த 2 பேர் சிக்கினர்
சேலம், சேலம், புது பஸ் ஸ்டாண்டில் நேற்று முன்தினம், மது விலக்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, பஸ்கள் வெளியேறும் பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தபோது கஞ்சா வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. விசாரணையில் கந்தம்பட்டி, மூலப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த வெங்கட்ராமன், 25, பள்ளப்பட்டி கேசவன், 48, என தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், 2 கிலோ கஞ்சா, 500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.