உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மதுபாட்டில்களால் குத்தி 2 பேர் படுகாயம்

மதுபாட்டில்களால் குத்தி 2 பேர் படுகாயம்

வாழப்பாடி :வாழப்பாடி, புதுப்பாளையம் அருகே ஆத்துமேட்டை சேர்ந்தவர் ரகுபதி, 38. வாழப்பாடி, அய்யாகவுண்டர் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார், 37. இருவரும், புதுப்பாளையத்தில் உள்ள அரசின் டாஸ்மாக் கடை முன், நேற்று மாலை, 6:00 மணிக்கு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கையில் வைத்திருந்த மது பாட்டில்களால் ஒருவருக்கொருவர் குத்திக்கொண்டனர். வாழப்பாடி போலீசார், படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'போலி ஆவணம் தயாரித்து நில மோசடி செய்ததாக அளித்த புகாரில், கடந்த, 8ல், 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, இந்த இருவர் இடையே முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கிக்கொண்டனர். விசாரணை நடக்கிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ