ஆசிரியையிடம் நகை பறிப்பு 2 பேருக்கு 3 ஆண்டு சிறை
சேலம், சேலம், அம்மாபேட்டை, செல்வ நகரை சேர்ந்தவர் அலமேலு, 59. அரசு பள்ளி ஆசிரியை. கடந்த ஏப்., 16ல், அங்குள்ள ஹோலிகிராஸ் பள்ளி அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர், அலமேலு அணிந்திருந்த, 5.5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினர். அலமேலு புகார்படி, வீராணம் போலீசார் வழக்குப்பதிந்து, கோவை, பிச்சானுாரை சேர்ந்த சையத் யூசுப், 58, திருப்பத்துார் மாவட்டம் தட்டான்குட்டையை சேர்ந்த கமலக்கண்ணன், 37, ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம், ஜே.எம்.எண்: 4ல் நடந்தது. அதில் மாஜிஸ்திரேட் பூவராகவன் நேற்று, சையத் யூசுப், கமலக்கண்ணன் ஆகியோருக்கு தலா, 3 ஆண்டு சிறை தண்டனை, தலா, 1,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.