உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாணவர் உள்பட 2 பேர் தற்கொலை

மாணவர் உள்பட 2 பேர் தற்கொலை

தாரமங்கலம்; தாரமங்கலம், வெள்ளக்கல்பட்டியை சேர்ந்தவர் கந்தன், 49. இவரது மகன் ஹரி விக்னேஷ், 15. தாரமங்கலம் அரசு சுய உதவி பள்ளியில், 10ம் வகுப்பு படித்தார். அவர் சரியாக படிக்காததால், பெற்றோர் அறிவுரை கூறி வந்தனர்.இந்நிலையில் ஹரி விக்னேஷ், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, சாப்பிட்டு விட்டு வெளியே சென்றான். வழக்கம்போல் உறவினர் வீட்டில் துாங்கிவிட்டு, காலை வந்து விடுவான் என எண்ணி, பெற்றோர் விட்டுவிட்டனர்.ஆனால் நேற்று, வீட்டின் அருகே உள்ள கொய்யா மரத்தில் துாக்கிட்டுக்கொண்டதாக, மக்கள் தகவல்படி, கந்தன் சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.ரூ.3 லட்சம் கடன்சேலம், பொன்னம்மாபேட்டையை சேர்ந்தவர் பாலமுருகன், 40. கூலித்தொழிலாளியான இவர் திருச்சியில் வீடு கட்ட, பலரிடம் கடன் வாங்கினார். அதில், 3 லட்சம் ரூபாயை, அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதில் மன உளைச்சலுக்கு ஆளான அவர், கடந்த, 10ல் பூச்சி மருந்து குடித்து மயங்கினார். குடும்பத்தினர் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !