கிணற்றில் தவறி விழுந்து 2 தொழிலாளி பலி
இடைப்பாடி கொங்கணாபுரம், கோரணம்பட்டி ஏரிக்காட்டை சேர்ந்தவர் கருப்பண்ணன், 49. அதே பகுதியில் சுதா என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில், நேற்று காலை இறங்கி, குப்பையை அகற்றி சுத்தம் செய்து கொண்டிருந்தார்.அப்போது அதே பகுதியை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி முருகேசன், 45, கருப்பண்ணனை பார்க்க வந்தார். தொடர்ந்து கிணற்றில் இறங்கினார். அப்போது அவர் தவறி விழுந்ததில் உயிரிழந்தார். கொங்கணாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.அதேபோல் தலைவாசல், சாத்தப்பாடி, இந்திரா நகரை சேர்ந்த, ஆறுமுகம் மகன் அஜித்குமார், 24. கூலித்தொழிலாளியான இவர், நேற்று காலை, அதே பகுதியை சேர்ந்த, வரதராஜ் என்பவரது கிணற்றோரம் நடந்து சென்றார். அப்போது, 10 அடி தண்ணீர் உள்ள கிணற்றில் விழுந்தார். ஆத்துார் தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரத்துக்கு பின், அஜித்குமார் சடலத்தை மீட்டனர்.