உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாவட்ட அளவில் டேக்வாண்டோ போட்டி 32 பள்ளியை சேர்ந்த 200 பேர் பங்கேற்பு

மாவட்ட அளவில் டேக்வாண்டோ போட்டி 32 பள்ளியை சேர்ந்த 200 பேர் பங்கேற்பு

நாமக்கல், பள்ளி மாணவியருக்கான, மாவட்ட டேக்வாண்டோ போட்டி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நேற்று நடந்தது. 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவியருக்கு தனித்தனியாகவும், 25க்கும் மேற்பட்ட எடை பிரிவுகளுக்கு தனியாகவும் போட்டி நடத்தப்பட்டது. தலைமையாசிரியர் சீனிவாசராகவன் தலைமை வகித்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் காந்திமதி போட்டிகளை துவக்கி வைத்தார். போட்டியில், மாவட்டம் முழுவதும் இருந்து, 32க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த, 200க்கும் அதிகமான மாணவியர் பங்கேற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.'போட்டி முடிவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் பின்னர் வழங்கப்படும். மேலும், வயது மற்றும் எடை பிரிவில் முதலிடம் பிடித்த மாணவியர், மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்' என்றும், பள்ளிக்கல்வித்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை