உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிங்கிபுரத்தில் கோவில் பூட்டை உடைத்து 21 பவுன், 6 கிலோ வெள்ளி கொள்ளை

சிங்கிபுரத்தில் கோவில் பூட்டை உடைத்து 21 பவுன், 6 கிலோ வெள்ளி கொள்ளை

வாழப்பாடி :வாழப்பாடி அருகே, கோவில் பூட்டை உடைத்து தங்க நகை, வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம் பகுதியில், வன்னியர் தெருவில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அத்தனுார் அம்மன் கோவில் உள்ளது. நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு கோவில் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோவில் அர்ச்சகர் சாமிநாதன், ஊர் பெரியத்தனகாரர்களுக்கு தகவல் கொடுத்தனர்.பின், உள்ளே சென்று பார்த்த போது, கோவிலில் இரும்பு பெட்டியில் வைத்திருந்த, சுவாமிக்கு பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த தங்கத்தாலி, தங்கச் செயின் உள்ளிட்ட, 21 பவுன் தங்க நகைகள், வெள்ளி கிளி பொம்மை, கிரீடம் உள்ளிட்ட, 6 கிலோ மதிப்பிலான வெள்ளி பொருட்கள், உண்டியலில் இருந்த, 14 கிலோ நாணயங்கள் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. வாழப்பாடி போலீசார் அப்பகுதிக்கு சென்று, தடயங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகை பதிவு செய்யப்பட்டன. கோவில் பூட்டை உடைத்து, கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை