காவிரியில் 219 சிலை கரைப்பு
இடைப்பாடி: விநாயகர் சதுர்த்தி, கடந்த, 27ல் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நீர்நிலைகளில் பக்தர்கள், சிலை-களை கரைத்து வருகின்றனர். அதன், 4ம் நாளான நேற்று, கல்வ-டங்கம் காவிரி ஆற்றில், 196 சிலைகள், பூலாம்பட்டியில் உள்ள காவிரி ஆறு, பில்லுக்குறிச்சி வாய்க்கால், ஓணாம்பாறை வாய்க்கால் ஆகிய இடங்களில், 23 சிலைகள் என, 219 சிலைகள் கரைக்கப்பட்டன.