226 கிலோ புகையிலை பறிமுதல் ராஜஸ்தானை சேர்ந்த 2 பேர் கைது
தாரமங்கலம், தாரமங்கலம் போலீசார், நங்கவள்ளி சாலையில் உள்ள, 'சேலம் ஸ்டோர்' கடையில் நேற்று சோதனை செய்தனர். அதில் புகையிலை பொருட்கள் இருந்ததால், அதன் உரிமையாளரான, ராஜஸ்தானை சேர்ந்த மனோகர் சிங், 28, என்பவரிடம் விசாரித்தனர். அப்போது ராஜஸ்தானை சேர்ந்த மகேந்திரசிங், 23, என்பவருடன் சேர்ந்து, வெட்னிக்கரட்டில் குடோன் அமைத்து புகையிலை பொருட்களை விற்பதாக, மனோகர் சிங் தெரிவித்தார். இதனால் அங்கு சென்ற போலீசார், அங்கும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இரு இடங்களிலும், 91,632 ரூபாய் மதிப்பில், 226 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, மனோகர்சிங், மகேந்திரசிங்கை கைது செய்தனர்.