லாட்டரி விற்ற 23 பேர் கைது
சேலம்: சேலம் எஸ்.பி., கவுதம்கோயல் உத்தரவுப்படி மாவட்டத்தில் கடந்த, 5 முதல் நேற்று வரை, லாட்டரி விற்பனை குறித்து போலீசார் சோதனை நடத்தினர். அதில் இடைப்பாடி, பூலாம்பட்டி, ஆத்துார் நகரம், தம்மம்பட்டி, மகுடஞ்சாவடி, தாரமங்கலம், பனமரத்துப்பட்டி, சங்ககிரி, தீவட்டிப்பட்டி ஆகிய போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் லாட்டரி விற்ற, 23 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம், 31,710 ரூபாய், இருசக்கர வாகனம் ஒன்று, 340 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் வெளிமாநில லாட்டரி, துண்டு சீட்டில் லாட்டரி எண்களை எழுதி விற்பனை உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, எஸ்.பி., எச்சரித்துள்ளார். இத்தகவலை எஸ்.பி., அலுவலகம் தெரிவித்துள்ளது.