மாநகர் விபத்துகளில் 232 பேர் பலி 2023ஐ விட உயிரிழப்புகள் அதிகம்
சேலம்: சேலம் மாநகரில், 2024ம் ஆண்டில் ஏற்பட்ட வாகன விபத்து-களில், 232 பேர் பலியாகி உள்ளனர். இது, 2023ஐ விட அதிகம் என தெரியவந்துள்ளது.இதுகுறித்து சேலம் மாநகர போலீசார் கூறியதாவது:கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை, சாலை வாகன விபத்துகளில், 232 பேர் உயிரிழந்துள்ளனர். 789 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 2023ல், 217 பேர் உயிரிழந்தனர். 662 பேர் படுகாயம் அடைந்தனர். இதனுடன் ஒப்பிடுகையில், 2024ல், விபத்தால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. இதற்கு, வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைப்பிடிக்காததே காரணம்.குறிப்பாக தமிழக அரசு, ெஹல்மெட் கட்டாயம் என அறிவுறுத்தியும், இருசக்கர வாகன ஓட்டிகள் அலட்சியம் காட்டு-கின்றனர். சிலர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுகின்றனர். பல-முறை அபராதம் விதித்தும், தொடர்ந்து இதுபோன்று நடந்து கொள்வதால் விபத்துகள் அதிகரித்துள்ளன. 4 சக்கர வாகனம் ஓட்-டுவோர், சீட் பெல்ட் அணிவது கட்டாயம். அதையும் வாகன ஓட்-டிகள் சரியாக கடைப்பிடிப்பதில்லை.போலீஸ் துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்-தாலும், மக்கள், நம் உயிர் முக்கியம் என நினைத்து, விதிகளை பின்பற்றினால் உயிரிழப்பை தவிர்க்கலாம். போலீஸ் தரப்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 2025 விபத்-தில்லா ஆண்டாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.