மேலும் செய்திகள்
காளான் வளர்க்க பயிற்சி
25-Feb-2025
25 விவசாயிகளுக்குகோழி வளர்க்க பயிற்சிவீரபாண்டி:சேலம், உத்தமசோழபுரம் கால்நடை மருத்துவமனையில், கோழி வளர்ப்பு, கோழிகளுக்கு ஏற்படும் நோய்கள் குறித்த பயிற்சி நேற்று காலை நடந்தது. வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜேந்திரன், பயிற்சியின் நோக்கம், பயன் குறித்து பேசினார். தொடர்ந்து கோழிகளில் ஏற்படும் வெள்ளை கழிச்சல், அம்மை, காய்ச்சல், கிருமி தொற்று, சளி, குடல் புழுக்கள் அறிகுறி குறித்து, அதன் கட்டுப்பாட்டு முறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. கால்நடை உதவி மருத்துவர்கள் ரமேஷ், கண்மணி பயிற்சி அளித்தனர். இதில், 25 விவசாயிகள் பயிற்சி பெற்றனர்.
25-Feb-2025