உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 2,600 டன் சிமென்ட், உரம் சரக்கு ரயிலில் சேலம் வந்தது

2,600 டன் சிமென்ட், உரம் சரக்கு ரயிலில் சேலம் வந்தது

சேலம்:சேலம் சத்திரம் கூட்ஸ் ெஷட்டில், நேற்று வந்த சரக்கு ரயில்களில், 2,600 டன் சிமென்ட் மற்றும் உரங்கள் வந்திறங்கியது.வட மாநிலங்களிலிருந்து, சிமென்ட், உரம், தானிய வகைகள், சரக்கு ரயில்கள் மூலம், சேலம் கொண்டு வரப்படுகின்றன. சேலம் செவ்வாய்பேட்டை சத்திரம் கூட்ெஷட்டில், நேற்று காலை மகாராஷ்டிராவிலிருந்து, 1,300 டன் உரம் வந்தது. ஆந்திராவிலிருந்து மற்றொரு சரக்கு ரயிலில், 1,300 டன் சிமென்ட் வந்தது. இவற்றை, சுமைதுாக்கும் தொழிலாளர்கள் இறக்கி, லாரிகளில் ஏற்றி, குடோன்களுக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ