உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 2,750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

2,750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

சேலம்: சேலம், அம்மாபேட்டை ரோந்து போலீசார், நேற்று காலை, பொன்னம்மாபேட்டை, தாண்டவன் நகர், 4வது குறுக்கு தெருவில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது லாரி, மினி வேனில் ரேஷன் அரிசி லோடு, கடத்த-லுக்கு ஏற்றுவதை கண்டுபிடித்தனர். போலீசாரை பார்த்த கடத்தல் கும்பல், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. அங்கிருந்த லாரியில், 1,750 கிலோ அரிசி, வேனில், 1,000 கிலோ என, 2,750 கிலோ ரேஷன் அரிசி, இரு வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், புட்செல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் பொன்-னம்மாபேட்டை, அண்ணா நகரை சேர்ந்த செந்தில்குமார் உள்-பட, 4 பேர், இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை