உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் மாவட்டத்தில் 29 லட்சம் வாக்காளர்கள் நவ., 28 வரை புதுமுகங்கள் இணைய வாய்ப்பு

சேலம் மாவட்டத்தில் 29 லட்சம் வாக்காளர்கள் நவ., 28 வரை புதுமுகங்கள் இணைய வாய்ப்பு

சேலம், அக். 30-சேலம் கலெக்டர் அலுவலகத்தில், 2024 வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்து, பட்டியலை வெளியிட்டார். அதை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பெற்றுக்கொண்டனர். அதில் ஆண் வாக்காளர்கள், 14,71,774 பேர்; பெண் வாக்காளர்கள், 14,89,420 பேர்; இதர வாக்காளர், 319 பேர் அடங்கும். இதன்மூலம் சேலம் மாவட்டத்தில், 11 சட்டசபை தொகுதிகளில், 29,61,513 வாக்காளர்கள் உள்ளனர்.இதை, எம்.பி., தேர்தலுக்கு முன், கடந்த மார்ச், 27ல் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடுகையில், 16,111 வாக்காளர்கள் அதிகம். 2025 ஜன., 1ஐ தகுதி நாளாக கொண்டு அன்று, 18 வயது பூர்த்தி அடைவோர், பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். அதற்கு ஓட்டுச்சாவடி மையங்கள், தாசில்தார் அலுவலகம், நகராட்சி, மாநகராட்சி, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நவ., 28 வரை, பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய உரிய படிவம் பெற்று பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும். மேலும், www.elections.tn.gov.inஎன்ற முகவரி, 'ஓட்டர் ஹெல்ப்லைன்' மொபைல் செயலி மூலமும் விண்ணப்பிக்கலாம்.சிறப்பு முகாம்வாக்காளர் சேர்க்கையை, 100 சதவீதம் உறுதிப்படுத்த சிறப்பு முகாம்கள், நவ., 16, 17, 23, 24 ஆகிய சனி, ஞாயிறு நாட்களில் நடக்க உள்ளன. பின் சுருக்கமுறை திருத்தப்பணி மேற்கொண்டு, 2025 ஜன., 6ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை