சகோதரர்களை தாக்கிய 3 பேருக்கு வலை
சேலம், சேலம், கிச்சிப்பாளையம், மாதா கோவில் தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் தீனதயாள், 33. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேலுசாமி தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. கடந்த, 23 இரவு தீனதயாள், தம்பி மதனுடன் அப்பகுதியில் உள்ள ஒண்டி முனியப்பன் கோவில் பகுதியில் நின்றிருந்தார். அப்போது வேலுசாமி, அவரது நண்பர்கள் விக்ரம், கீர்த்திவாசன் ஆகியோர், 'போதை'யில் வந்து, தீனதயாள், மதனிடம் தகராறில் ஈடுபட்டு, கட்டையால் தாக்கினர். தீனதயாள், மதன் படுகாயம் அடைந்தனர்.மக்கள் அவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கிச்சிப்பாளைம் போலீசார் விசாரித்து, சகோதரர்களை தாக்கிய, 3 பேரை தேடுகின்றனர்.