உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பேராசிரியர் பைக்கை திருடிய 3 பேர் கைது

பேராசிரியர் பைக்கை திருடிய 3 பேர் கைது

சேலம்: கல்லுாரி பேராசிரியரின், இருசக்கர வாகனத்தை திருடிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.இடைப்பாடியை சேர்ந்த அரவிந்த், 27, சீரகாபாடி இந்தியன் வங்கி கிளை அருகே வாடகைக்கு வீடு எடுத்து, குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆக., 20ல் வீட்டின் முன் தனது பஜாஜ் பல்சர் இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தார். ஊருக்கு சென்று வந்த பின் பைக்கை காணவில்லை.ஆட்டையாம்பட்டி போலீசார், நேற்று சீரகாபாடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பல்சர் பைக்கில் வந்தவர்களை நிறுத்தி விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். பின்னர் விசாரித்ததில், அரவிந்தின் பைக்கை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து பைக்கை பறிமுதல் செய்து, கருப்பூர் இந்திரா நகர் பாலமுருகன், 19, பிரேம், 19 மற்றும் சூரமங்கலம் ஜீவா, 19, ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை