உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 3 பைக் மீட்பு: திருடன் கைது

3 பைக் மீட்பு: திருடன் கைது

சேலம்:சேலம், அன்னதானப்பட்டியில் அடுத்தடுத்து இருசக்கர வாகனங்கள் திருடுபோகின. இதுதொடர்பாக, தாதகாப்பட்டி, மூணாங்கரடு, மாரியம்மன் கோவில் பகுதியில் வசிக்கும் பழனிசாமி, 32, என்பவர் மீது சந்தேகப்பட்டு, அவரை அழைத்து விசாரணை நடத்தினர். அதில் அவர், தாதகாப்பட்டி செல்லக்குட்டி காட்டை சேர்ந்த தமிழ் பாவை, 55, என்பவருக்கு சொந்தமான ஸ்பிளண்டர் பிளஸ் பைக், செவ்வாய்ப்பேட்டை, ஹவுஸிங் போர்டில் வசிக்கும் சந்திரசேகர், 41, என்பவருக்கு சொந்தமான ஹீரோ ேஹாண்டா பைக் திருடியதை ஒப்புக்கொண்டார். அவரது வாக்குமூலப்படி, இரு பைக்குகள், ஏற்கனவே வீராணத்தில் திருடிய மற்றொரு பைக்கை, போலீசார் மீட்டனர். மேலும் பழனிசாமி மீது, ஈரோடு மாவட்டத்தில் வழிப்பறி, நாமக்கல் மாவட்டம், சேலம் மாநகர் பகுதிகளில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை