உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரயில் நிலையத்தில் 3 சிறுவர்கள் மீட்பு

ரயில் நிலையத்தில் 3 சிறுவர்கள் மீட்பு

சேலம்: சேலம் ரயில் நிலையத்தில், பாதுகாப்புபடை போலீசார், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, 4வது நடைமேடையில் சந்தேகப்படும் வகையில், சுற்றித்திரிந்த மூன்று சிறுவர்களை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், சேலம் ஓமலுாரை சேர்ந்தவர்கள் என்பதும், ஒரு சிறுவனுக்கு 15 வயது, மற்ற இரு சிறுவர்களுக்கு 14 வயது என்பதும், பெற்றோருக்கு தெரியாமல், மூவரும் வீட்டை விட்டு வெளியே வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து, சிறுவர்கள் மூவரும் சேலம் சைல்டு லைனில் ஒப்படைக்கப்பட்டனர். அத்துடன், ஓமலுார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ