உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 3 மாத திறன் பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

3 மாத திறன் பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

சேலம்: சேலம் தொழிலாளர் உதவி கமிஷனர் சங்கீதா (சமூக பாதுகாப்பு திட்டம்) அறிக்கை: தமிழகத்தில், 17 வகை தொழிலாளர்களை கொண்டு கட்டுமான தொழிலாளர் நலவாரியம் செயல்படுகிறது. அதில், 18 முதல், 60 வயது வரை உறுப்பினராக இருப்பவர்கள், 5 ஆண்டுக்கு ஒரு-முறை புதுப்பிக்க வேண்டும். அவர்களுக்கு திருமணம், மகப்-பேறு, குழந்தைகளுக்கான கல்வி நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு நல உதவிகள் வழங்கப்படுகின்றன.கொத்தனார், வெல்டர், மின்சார வேலை, பிளம்பர், மரவேலை, கம்பி வளைப்பவர்கள் உள்பட பல தொழில் செய்வோருக்கு, கட்-டுமான கழகம் மூலம், 3 மாத திறன் பயிற்சி மற்றும் ஒரு வார திறன் மேம்பாடு, வரும், 20ல் தொடங்கப்பட உள்ளது.கல்வி தகுதி, 5 முதல், பிளஸ் 2 அல்லது ஐ.டி.ஐ., படித்திருக்க வேண்டும். வயது, 18 முதல், 40க்குள் இருக்க வேண்டும். பயிற்சி கட்டணம், உணவு, தங்குமிடம் இலவசம். பயிற்சி பெறுவோ-ருக்கு, 'எல் அண்ட் டி' கட்டுமான திறன் பயிற்சி நிலையத்தில் வேலை வாய்ப்பு அளிக்கப்படும். அத்துடன் ஒரு வார பயிற்சி, தையூரில் உள்ள தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் அளிக்கப்படும். இதில், 18 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்கலாம். பயிற்சி பெறுவோருக்கு தினமும், 800 ரூபாய் வழங்கப்படும். இத்-தொகையில் உணவுக்கு மட்டும் பிடித்தம் செய்யப்படும். தகுதியா-னவர்கள், சேலம், கோரிமேடு, தொழிலாளர் உதவி கமிஷனர், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் படிவம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை